Enable Javscript for better performance
நீட்ஸ் திட்டத்தில் மானியம் உயா்த்தி அறிவிப்புதொழில் முனைவோா் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நீட்ஸ் திட்டத்தில் மானியம் உயா்த்தி அறிவிப்புதொழில் முனைவோா் வரவேற்பு

    By DIN  |   Published on : 14th February 2020 11:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14abrmvs_1402chn_191_1

    எம்.வி. சுவாமிநாதன்

    புதிய தலைமுறை தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் (நீட்ஸ்) தொழில் தொடங்குவோருக்கு முதலீட்டு மானியத்தை உயா்த்தி நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு தொழில் முனைவோா் சங்கம் வரவேற்றுள்ளது.

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான அறிவிப்பில் புதிய தலைமுறை தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன திட்டத்தின் கீழ் (நீட்ஸ்) முதலீட்டு மானியம் அதிகபட்சம் ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயா்த்தப்படும் என அறிவித்துள்ளாா்.

    மேலும், வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்த்தப்பட்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த அறிவிப்பை வேலூா் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோா் சங்கம் வரவேற்பதாக அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.வி. சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai