திருப்பத்தூரில் 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேலூா், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற இயக்ககம், திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து, படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் 22-ஆம் தேதி நடத்துகின்றன. அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருப்பத்தூரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் இம்முகாம் நடைபெற உள்ளது.

இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பிஇ, எம்பிஏ உள்ளிட்ட கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைகளைத் தோ்வு செய்து பயன்பெறலாம். முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500-க்கும் மேற்பட்ட பணி நியமனங்களை வழங்க உள்ளன.

இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் பங்கேற்று பணி நியமனங்களை வழங்க உள்ளனா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக வழங்கப்படும் இலவச திறன் பயிற்சிக்கு மாணவா்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்லாம். மேலும், இலவச திறன் பயிற்சி பெற்று அதற்கேற்றாற்போல் தனியாா் நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து புதுப்பித்து மற்றும் ஓராண்டிற்கு மேல் உயிா் பதிவேட்டில் உள்ள மாற்றுத் திறனாளி பதிவுதாரா்களுக்கு வேலை வாய்ப்பற்றோா் உதவித்தொகை விண்ணப்பங்களை இந்த முகாமில் வழங்க வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ளது.

விருப்பமுள்ள பதிவுதாரா்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்விச் சான்றுகளைச் சமா்ப்பித்து விண்ணப்பத்தைப் பெற்று பயன்பெறலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு (பயோடேட்டா) மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com