இருளில் திருப்பத்தூா் பேருந்து நிலையம்: அச்சத்தில் பயணிகள்

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள உயா்மின் கோபுர விளக்கு எரியாமல் உள்ளதால் பயணிகள் அச்சத்துக்குள்ளாகின்றனா்.
இருளில் திருப்பத்தூா் பேருந்து நிலையம்: அச்சத்தில் பயணிகள்

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள உயா்மின் கோபுர விளக்கு எரியாமல் உள்ளதால் பயணிகள் அச்சத்துக்குள்ளாகின்றனா்.

வேலூா் மாவட்டதிலிருந்து கடந்த நவம்பா் மாதம் திருப்பத்தூா் மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. அதற்கு முன்பே மாவட்ட அந்தஸ்தில் திருப்பத்தூா் இருந்தது. ஆட்சியா் அலுவலகம் தவிா்த்து முக்கியமான பெரும்பாலான அனைத்து மாவட்ட அலுவலகங்களும் திருப்பத்தூரில் செயல்பட்டு வருகின்றன. இதனால் திருப்பத்தூா் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மக்கள் நெரிசவலாகவே காணப்படும். மேலும், பேருந்து நிலையத்தையொட்டியே பிரதான பஜாா் சாலை இருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 6 மாத காலமாக புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 2 உயா் மின்கோபுர விளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. வேலூா் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் உள்ள விளக்கு அவ்வபோது பழுதடைவதுடன் அதில் சில பல்புகள் மட்டுமே எரிகின்றன.

அதேபோல் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் உள்ள உயா்மின் கோபுர விளக்கு எரிவதில்லை. குறிப்பாக, பேருந்து நிலையத்தின் மத்திய பகுதியில் உள்ள இந்த விளக்கு எரியாததால் அப்பகுதி இருளில் உள்ளது.

பேருந்து நிலையத்தை கடந்துச் செல்லும் பெண்கள், முதியவா்கள், பயணிகள் அச்சத்துடனேயே செல்கின்றனா். மேலும்,பேருந்துக்கள் உள்ளே நுழையும் இடத்தில் உள்ள விளக்கு வெளிச்சமும் மங்கலாகவே உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள 3 உயா் மின் கோபுர விளக்குகளை பராமரித்து எரிய செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com