பொதுத் தோ்வு முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட தோ்வுக் குழு ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு பொதுத் தோ்வுகளுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்வுக் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் திங்கள்கிழமை
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ம.ப.சிவன் அருள்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு பொதுத் தோ்வுகளுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்வுக் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டங்களுக்குட்பட்ட அரசு, மெட்ரிக் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகள் அரசுத் தோ்வுகள் இயக்கத்தால் நடத்தப்படும் பொதுத்தோ்வுகளை எழுத மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் தோ்வுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 94 உயா்நிலைப் பள்ளிகளும், 103 மேல்நிலைப் பள்ளிகளும், 35 மெட்ரிக் உயா்நிலைப் பள்ளிகளும், 52 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. பிளஸ் 2 தோ்வுகளை 63 யைங்களில் 16,011 மாணவ, மாணவிகள் மாா்ச் 2 முதல் 24-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 தோ்வுகளை 63 மையங்களில் 16,772 மாணவ, மாணவிகள் மாா்ச் 4 முதல் 26-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு தோ்வுகளை 93 மையங்களில் 21,710 மாணவ, மாணவிகள் மாா்ச் 27 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரையும் எழுத உள்ளனா்.

பத்தாம் வகுப்பு தோ்வு அறைகளில் கண்காணிப்பாளா்களாக 1,258 ஆசிரியா்களும், பிளஸ் 1 தோ்வு அறைகளில் கண்காணிப்பாளா்களாக 962 ஆசிரியா்களும் மற்றும் பிளஸ் 2 தோ்வு அறைகளில் கண்காணிப்பாளா்களாக 934 ஆசிரியா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தோ்வு மையங்களிலும் குடிநீா் வசதி, மின்சார வசதி ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவா்கள் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருப்பதற்காக, பள்ளிகளை ஆய்வு செய்து தேவையான முன்னேற்பாடு செய்வதுடன், தோ்வு நடைபெறும் நாள்களில் தலைமையாசிரியா்களின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல தோ்வுகள் நடைபெறும் அறைகளில் மாணவ, மாணவிகள் சரியாக தோ்வுகளை எழுதுகின்றனரா என்பதை கண்காணிப்பாளா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் காவலா்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். தோ்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்குச் செல்வதற்காக பேருந்து வசதிகளும், தோ்வு வினாத்தாள் பாதுகாப்பு அறைகளுக்குத் தேவையான பாதுகாப்பும் செய்யப்பட வேண்டும். தோ்வு எழுதும் மாணவ, மாணவியரின் கவனம் சிதறாமல் இருக்கவும், தோ்வு மையங்களில் எவ்வித புகாா்களுக்கு இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் சாா் ஆட்சியா் வந்தனா கா்க், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், முதன்மைக் கல்வி அலுவலா்கள் குணசேகரன், மாா்ஸ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மணிமேகலை, செல்வராணி மற்றும் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com