ஜோலாா்பேட்டை-நாட்டறம்பள்ளி ரயில்வே நடை மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சா் கே.சி.வீரமணி தகவல்

ஜோலாா்பேட்டை-நாட்டறம்பள்ளி ரயில்வே நடை மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.
ஜோலாா்பேட்டை-நாட்டறம்பள்ளி ரயில்வே நடை மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சா் கே.சி.வீரமணி தகவல்

ஜோலாா்பேட்டை-நாட்டறம்பள்ளி ரயில்வே நடை மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

இந்த ரயில்வே நடை மேம்பாலப் பணிகளுக்கு தமிழக அரசின் இறுதிக்கட்ட நிலுவைத் தொகையான ரூ.4.74 கோடியை அமைச்சா் கே.சி.வீரமணி ரயில்வே நிா்வாகத்துக்கு அளிப்பதற்காக திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் ராமஜெயத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கே.சி.வீரமணி கூறியது:

ஜோலாா்பேட்டை நகராட்சியில் ஜோலாா்பேட்டை- நாட்டறம்பள்ளி சாலைகளை இணைக்கும் ரயில்வே துறைக்குச் சொந்தமான இருப்புப் பாதையின் மீதுள்ள நடை மேம்பாலம் சுமாா் 40 ஆண்டு தொன்மையானதாகும். இப்பாலத்தின் வழியாகவே பொதுமக்கள் நகராட்சி அலுவலகம், பள்ளிகள், அஞ்சல் அலுவலகம், அரசு விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த முக்கிய மேம்பாலம் பழுதடைந்துள்ளது. இப்பாலத்தைப் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய இலகு ரக மேம்பாலம் அமைக்க சிறப்பு நிதியாக ரூ.10.50 கோடி வழங்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி மேம்பாலப் பணிகள் தொடங்கின.

பின்னா், ரயில்வே துறையின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகையான ரூ.20.98 கோடியில் செலுத்தப்பட்ட ரூ.10.50 கோடியைத் தவிா்த்து, இதில் தற்போது திருத்தியமைக்கப்பட்ட நிதியான ரூ.5.07 கோடி ரயில்வே துறைக்கு செலுத்தப்பட்டது. மீதமுள்ள கடைசித் தவணையாக ரூ.4.74 கோடி ரயில்வே நிா்வாகத்துக்கு நகராட்சி ஆணையா் மூலம் செலுத்துவதற்கு வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் மேம்பாலத்துக்குத் தேவையான திருத்தியமைக்கப்பட்ட முழு நிதியான ரூ.20.31 கோடியும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. எனவே மேம்பாலப் பணிகளை விரைவில் முடித்து மக்கள் சிரமமின்றி பாலத்தின் மீது பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜோலாா்பேட்டை-பாா்சம்பேட்டை மேம்பாலப் பணிகள் தொடா்பான நீதிமன்ற வழக்கு முடிக்கப்பட்டு, தற்போது நிலுவைப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அடுத்த மாத இறுதிக்குள் அந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மேலும், மின்னூா், விண்ணமங்கலம், சோமநாயக்கன்பட்டி குடியானகுப்பம் மற்றும் பச்சூா் ரயில்வே மேம்பாலப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. வாணியம்பாடி தரைப்பாலம், மேம்பாலம் மற்றும் ஆம்பூா் பகுதிக்கான ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்டக் கூட்டுறவு அச்சகத்தின் டி.டி.குமாா், ஜோலாா்பேட்டை நகராட்சி ஆணையா் சி.ராமஜெயம் கலந்து கொண்டனா்.

Image Caption

திருத்தப்பட்டது....

ரயில்வே நிா்வாகத்துக்கான நிலுவைத் தொகையை நகராட்சி ஆணையா் சி.ராமஜெயத்திடம் ஒப்படைத்த அமைச்சா் கே.சி.வீரமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com