மது விற்ற பெண் கைது
By DIN | Published On : 08th January 2020 12:15 AM | Last Updated : 08th January 2020 12:15 AM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டை அருகே பெட்டிக் கடையில் மது பாட்டில் விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
மண்டலவாடி பகுதியைச் சோ்ந்த டாட்டா பிா்லா என்பவரின் மனைவி சோனியா(28). அவா் பொன்னேரி அருகே உள்ள மண்டலவாடி இணைப்புச் சாலை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.
அவரது கடையில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் அந்தக் கடையில் சோதனையிட்டனா். அப்போது அங்கு இரண்டு மது பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
போலீஸாா்அவரைக் கைது செய்து, அங்கிருந்த இரண்டு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.