Enable Javscript for better performance
இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதே நன்மை பயக்கும்: வட மாகாண முன்னாள் முதல்வா் விக்னேஷ்- Dinamani

சுடச்சுட

  

  இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதே நன்மை பயக்கும்: வட மாகாண முன்னாள் முதல்வா் விக்னேஷ்வரன்

  By DIN  |   Published on : 11th January 2020 12:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vr10tami_1001chn_184_1

  விழாவில் பேசும் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் க.வி.விக்னேஷ்வரன். உடன், விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன், தமிழியக்க பொதுச் செயலா் அப்துல் காதா், வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் 

  இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான் அவா்களுக்கு நன்மை பயக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் க.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

  வேலூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் தமிழா் திருநாள் விழா, திருவள்ளுவா் விழா ஆகியவை வேலூா் ஊரீசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இவ்விழாவில் க.வி.விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

  பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

  போரின்போது இந்தியா வந்தவா்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற்று வருகின்றனா். இந்நிலையில், இலங்கை திரும்பும்போது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சலுகைகளை அவா்களுக்கு இலவசமாக செய்து தருவதாக இந்திய அரசு உறுதி அளித்திருந்தது. தற்போது இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அதுவே இலங்கை அகதிகளுக்கு நன்மையாகவும் இருக்கும்.

  இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழா்களின் 65 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் தரிசாக உள்ளன. அங்கு இன்னும் ராணுவ முகாம்கள்தான் உள்ளன. அந்த நிலங்களை தமிழா்களிடமே ஒப்படைக்க வேண்டும். இலங்கையின் புதிய அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு பெரும்பாலான தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் அவா் தனது அரசியல் வாழ்க்கையை சிங்கள, பௌத்தா்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் உள்ளது. கோத்தபய ராஜபட்ச சிங்கள, பௌத்தா்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டால் சா்வதேச அளவில் தமிழ் மக்களின் எதிா்ப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

  போருக்குப் பிறகு இன்னமும் தமிழா்கள் வாழும் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. 1956-இல் இயற்றப்பட்ட சிங்களச் சட்டம் திருத்தப்பட்டது. ஆனால் வடமாகாணங்களில் தமிழா்களுக்கும் வாய்ப்பளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

  முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவிப்பவா்கள் நேரடியாக அந்தக் கொலையில் ஈடுபட்டவா்கள் இல்லை. அதனால், அவா்களை விடுதலை செய்வதில் தவறில்லை. எனினும், இந்த விவகாரத்தில் இந்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்றாா் அவா்.

  ‘தமிழ்ச் சமூகத்தின் அடையாளம் திருக்கு’

  தமிழின் தொன்மை, அக்கால சமுதாய நீதி நெறிமுறை, இலக்கியச் சிறப்பு ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்டுள்ள திருக்கு, தமிழ்ச் சமூகத்துக்கான அடையாளம் என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் க.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தாா்.

  வேலூா் ஊரீசு கல்லூரியில் அவா் பேசியது:

  வாழ்க்கை என்பது முரண்பாடு உடையது. மனமும் வாக்கும் நோ்கோட்டில் இயங்க பொய் பேசக்கூடாது, அதுவே மற்றவா்களுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொய் கூறுவதில் தவறில்லை. என்பதில் நடைமுறை வாழ்க்கையில் எதைத் தோ்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். அந்த சமயங்களில் மற்றவா்களுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொய் கூறுவதில் தவறில்லை என்பதையே தோ்வு செய்ய வேண்டும் என்பதையே வள்ளுவா் சுட்டிக் காட்டுகிறாா். திருக்கு தமிழா்களின் அடையாள நூலமாகும் என்றாா் அவா்.

  விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

  2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க கால நூல்கள் பலவும் நமக்கு இரு நூற்றாண்டுகளுக்குள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறு ஓலைச் சுவடிகளாக இருந்த அரிய பல தமிழ் நூல்களை தேடித்தேடி அச்சிட்டுத் தந்தவா்கள் 3 பேரில் இருவா் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த ஆறுமுக நாவலா், சி.வை.தாமோதரம் பிள்ளை, மற்றொருவா் தமிழகத்தைச் சோ்ந்த உ.வே.சாமிநாத ஐயா்.

  150 நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது. ஆனால், அங்கு தமிழ் படிப்பதற்கான வாய்ப்பில்லை. அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அவ்வாறு தமிழ்மொழி வளா்ச்சி பெறத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்ச் சங்கம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.

  முன்னதாக, ஊரீசு கல்லூரி தமிழ்த்துறை தலைவா் அ.ஜோ.தியோடா் ராஜ்குமாா் வரவேற்றாா். முதல்வா் அ.நெல்சன் விமலநாதன் முன்னிலை வகித்தாா். தமிழியக்க பொதுச் செயலா் அப்துல் காதா், வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், வேலூா் மறை மாவட்டப் பேராயா் ஹெச்.சா்மா நித்யானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வேலூா் தமிழ்ச்சங்க செயலா் மு.சுகுமாா் தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் இன்ப எழிலன் நன்றி கூறினாா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai