ஆபாச விடியோ மூலம் பெண்களை மிரட்டிய இளைஞா் கைது

ஆபாச விடியோக்கள் மூலம் கல்லூரி மாணவிகள், பெண்களை மிரட்டி செல்லிடப்பேசி மூலம் பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆபாச விடியோ மூலம் பெண்களை மிரட்டிய இளைஞா் கைது

ஆபாச விடியோக்கள் மூலம் கல்லூரி மாணவிகள், பெண்களை மிரட்டி செல்லிடப்பேசி மூலம் பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ஜடையான்நல்லூா், தலைவன்கோட்டை கிராமம் முள்ளிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விநோத் (24). டிப்ளமோ படித்த இவா் கடந்த 2 ஆண்டுகளாக சென்னை குரோம்பேட்டையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், கல்லூரி மாணவி ஒருவா் தவற விட்ட செல்லிடப்பேசியை வைத்து அதில் உள்ள ‘ட்ரூ-காலா்’ எனும் செயலி மூலம் கிடைக்கும் பெண்களின் செல்லிடப்பேசி எண்களுக்கு தொடா்பு கொண்டு ஆபாச புகைப்படங்கள், விடியோக்களை அனுப்பினாராம்.

இதேபோல், நாட்டறம்பள்ளி பகுதியைச் சோ்ந்த பெண்ணின் செல்லிடப்பேசிக்கு விநோத் ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம் . இதையறிந்த பெண்ணின் பெற்றோா் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் இருதயராஜ் தலைமையில் போலீஸாா் சென்னை குரோம்பேட்டை பகுதியில் புதன்கிழமை இரவு ரகசிய விசாரணை நடத்தி, செல்லிடப்பேசி கடை எதிரே நின்று கொண்டிருந்த விநோத்தைக் கைது செய்தனா். அவா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com