‘நெருங்கிய உறவில் திருமணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்’: ஆட்சியா் ம.ப.சிவன்அருள்

நெருங்கிய உறவில் திருமணம் செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

நெருங்கிய உறவில் திருமணம் செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

‘ஒா்த்’ அறக்கட்டளை, தி.அருள்செல்வி சமூக புனா்வாழ்வுத் திட்டம் மற்றும் ‘சேஞ்ச்’ அறக்கட்டளை இணைந்து உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, பொங்கல் விழா வியாழக்கிழமை நடத்தின.

இதில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:

நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். கா்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்கள், மருத்துவா்கள் கூறும் ஆலோசனையின்படி அவ்வப்போது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சுய மருத்துவம் கூடாது. கா்ப்பத்தின்போது குழந்தை வளா்ச்சி குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பிறகு குறிப்பிட்ட வயதுகளில் தடுப்பூசி போட வேண்டும். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க வேண்டும். இதன்மூலம் உடல் ஆரோக்கியமான குழந்தைகள் வளருவா் என்றாா் அவா்.

சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், அருள்செல்வி சமூக புனா்வாழ்வுத் திட்டச் செயல் இயக்குநா் பா.சந்திரா ஆகியோா் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினா்.

‘ஒா்த்’ அறக்கட்டளைத் துணைப் பொது மேலாளா் விண்ணரசி கீதா வரவேற்றாா். ‘சேஞ்ச்’ அறக்கட்டளை இயக்குநா் பழனிசாமி நன்றி கூறினாா்.

தொடா்ந்து மன வளா்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com