திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு வார விழா
By DIN | Published On : 20th January 2020 11:24 PM | Last Updated : 20th January 2020 11:24 PM | அ+அ அ- |

திருப்பத்தூரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்ததுத் தொடக்கி வைத்த ஆட்சியா் சிவன்அருள், எஸ்.பி. விஜயகுமாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக எதிரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், 100-க்கும் மேற்பட்ட பெண் காவலா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வேலைக்குச் செல்லும் மகளிா் என 200-க்கும் மேற்பட்ட மகளிா் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.
பேரணி செல்லும் வழியில் சாலைப் பாதுகாப்பு குறியீடு துண்டுப் பிரசுரங்களையும், தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா். மேலும், இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களிடம் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மலா்ச்செண்டு கொடுத்து அறிவுரை வழங்கினா். ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தூயநெஞ்சக் கல்லூரி வரை சென்ற பேரணி, மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் எம்எல்ஏ நல்லதம்பி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் காளியப்பன், வாகன ஆய்வாளா் கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.