நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நாடகம்
By DIN | Published On : 20th January 2020 11:46 PM | Last Updated : 20th January 2020 11:46 PM | அ+அ அ- |

நெகிழி ஒழிப்பு உள்ளிட்டவை தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், நாட்டறம்பள்ளி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.
மழைநீா் சேகரிப்பு திட்டம், பொது சுகாதாரம், தனிநபா் கழிவறை, நெகிழி ஒழிப்பு, டெங்கு தடுப்பு ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு நடனம் மற்றும் நாடகம் நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா்(பொறுப்பு) கணேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பரணி மேடை கலைக்குழுவினா் நடனம் மற்றும் நாடகம் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில் பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.