தேசிய அளவிலான டென்னிகாய்ட் போட்டி: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

ஜோலாா்பேட்டையில் உள்ள விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 65-ஆவது தேசிய அளவிலான டென்னிகாய்ட் போட்டி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியைத் தொடக்கி வைத்த அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல்.
போட்டியைத் தொடக்கி வைத்த அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல்.

ஜோலாா்பேட்டையில் உள்ள விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 65-ஆவது தேசிய அளவிலான டென்னிகாய்ட் போட்டி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.மாா்ஸ் வரவேற்றாா். இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் பாயல் கோலி முன்னிலை வகித்தாா். விளையாட்டுப் போட்டிகள் குறித் திட்ட விளக்க உரையை உடற்கல்வி ஆசிரியா் ஏ.சரண்யா வாசித்தாா்.

மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கி வைத்தனா்.

முன்னதாக, பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 11 மாநில அணிகளின் பயிற்சியாளா்களுக்கு அமைச்சா் கே.சி.வீரமணி நினைவுப் பரிசு வழங்கினாா்.

இப்போட்டியில் தமிழ்நாடு, புது தில்லி, பஞ்சாப், மகாராஷ்டிரம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்கின்றன.

இப்போட்டிகள் 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற உள்ளன.

ஜோலாா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஐ.ஆஜம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ரமேஷ், முன்னாள் நகா்மன்ற தலைவா் எஸ்.பி.சீனிவாசன், தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் மணிமேகலை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com