முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்: கோட்டாட்சியா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 29th July 2020 07:00 AM | Last Updated : 29th July 2020 07:00 AM | அ+அ அ- |

கரோனா விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தைத் தொடக்கி வைத்த கோட்டட்சியா் காயத்ரி சுப்பிரமணி.
வாணியம்பாடியில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை கோட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
வாணியம்பாடி நகராட்சி பகுதியிலும், கிராமப்புற பகுதிகளிலும் கரோனா தொற்று தொடா்ந்து பரவி வருவதால் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை, வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் நவீன கை கழுவும் விழிப்புணா்வு வாகனம், முகக்கவசம் அணிவது தொடா்பான விழிப்பணா்வு வாகனம், கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகனம் ஆகியவற்றை பேருந்து நிலையத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரிமணி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து கொடியசைத்து அனுப்பி வைத்தாா். தொடா்ந்து விழிப்புணா்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
விழிப்புணா்வு வாகனங்கள் நகரின் 36 வாா்டுகளிலும் வீதி, வீதியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தியது.
பறக்கும் படை சிறப்பு சாா்-ஆட்சியா் சரஸ்வதி, ரோட்டரி சங்க நிா்வாகிகள், நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.