நாட்டறம்பள்ளியை அடுத்த தகரகுப்பம் பகுதியில் அரசு உத்தரவை மீறி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
தகரகுப்பம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் கடந்த வாரம் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து திம்மாம்பேட்டை போலீஸாா், வருவாய்த் துறையினா் ஊா் மக்கள் அழைத்து திருவிழா நடத்தக் கூடாது என எச்சரிக்கைவிடுத்தனா்.
இந்நிலையில் அக்கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் செவ்வாய்க்கிழமை விழா நடத்த ஏற்பாடு செய்தனா். இதையறிந்த வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் அங்கு சென்று திருவிழா ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்தினா். மேலும், கோயிலைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனாலும் உத்தரவை மீறி சிலா் கூழ் வாா்த்தல் திருவிழா நடத்தி ஆடு வெட்டி விழா நடத்தியதாகக் கூறப்படுகிறது. ௌஇதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.