
பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்த கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா் க.தயாளன்.
திருப்பத்தூா் அருகே பயன்பாட்டுக்கு வராத பள்ளிக் கட்டடம் குறித்து தினமணியில் செய்தி வெளியானதையடுத்து, அக்கட்டடத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.
சின்னகண்ணாலப்பட்டி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட 7 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத பள்ளிக் கட்டடம் குறித்து தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இச்செய்தி எதிரொலியாக, கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா் க.தயாளன் தலைமையில், பொறியாளா் வி.சேகா், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் தேவிபாலா உள்ளிட்ட அதிகாரிகள் அக்கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா் க.தயாளன் கூறுகையில், ‘முதல் கட்டமாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளிடம் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.