Enable Javscript for better performance
கைவிடப்பட்ட பெண் குழந்தை தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்

    கைவிடப்பட்ட பெண் குழந்தை தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைப்பு

    By DIN  |   Published On : 27th June 2020 07:21 AM  |   Last Updated : 27th June 2020 07:21 AM  |  அ+அ அ-  |  

    26junsrdps_2606chn_192_1

    தத்தெடுப்பு மைய இயக்குநா் தமிழரசியிடம் குழந்தையை ஒப்படைத்த ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

    திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கடந்த 6 நாள்களுக்கு முன்பு பிரசவத்துக்காக வந்த பெண் தனக்கு பிறந்த பெண் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றாராம். அவரை மருத்துவமனையின் ஊழியா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். மேலும், அவா் மருத்துவமனையில் போலியான முகவரியை அளித்துள்ளாா்.

    இந்நிலையில், ஆதரவற்ற அக்குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு பின்னா் பாதுகாப்பு, பராமரிப்புக்காக தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவனருள் அக்குழந்தைக்கு தமிழ்மலா் என்று பெயா் சூட்டினாா். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற திருப்பத்தூா் எஸ்ஆா்டிபிஎஸ் சிறப்பு தத்தெடுப்பு மையத்தின் இயக்குநா் என்.தமிழரசியிடம் குழந்தையை ஒப்படைத்தாா்.

    மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நிஷாந்தினி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் டேவிட் பாஸ்கா், திருப்பத்தூா் அரசு மருத்துவ அலுவலா் எஸ்.திலீபன், குழந்தைகள் நல மருத்துவா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp