முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
தொழில் முனைவோருக்கு கடனுதவி: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவிப்பு
By DIN | Published On : 27th June 2020 07:22 AM | Last Updated : 27th June 2020 07:22 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையங்கள் மூலம், படித்த மற்றும் படிக்காத இளைஞா்கள் சுயதொழில் தொடங்குவதற்கும் மேம்படுத்தவும் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் வருமாறு:
(திட்டங்களில் சிறப்பு பிரிவினருக்கான கூடுதல் சலுகைகள் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், திருநங்கையா், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு வயது மற்றும் பயனாளிகளின் முதலீட்டுப் பங்கீட்டில் கூடுதல் சலுகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன).
புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டு முதல் தலைமுறை தொழில் முனைவோா் 12 பேருக்கு சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்க வங்கிகள்(அல்லது) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக கடன் வழங்க நிதி ஒதுக்கீடு ரூ.115 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதனில் 50 சதவீதம் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
திட்டத்தில் இரண்டு போ் அல்லது மூவா் கூட்டாகத் தொழில் தொடங்க அனுமதி உண்டு.
தகுதிகள்: 21 வயது முதல் 35 வயது வரை சிறப்புப் பிரிவினருக்கு 10 ஆண்டு விலக்கு. பட்டம் / பட்டயம் / தொழிற்பயிற்சி பெற்றவா்கள். 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவா்கள். திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் 5 கோடிகள் வரை.
திட்டத்தில் நிலம் மற்றும் கட்டட மதிப்பீடு சோ்த்துக் கொள்ளலாம். இதில் பொது பிரிவினா் 10 சதவீதம்,சிறப்புப் பிரிவினா் 5 சதவீதம். மானியம் 25 சதவீதம் உச்சமாக ரூ.30 லட்சம் மற்றும் வட்டி மானியம் 3 சதவீதம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் படித்த வேலையற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் நடப்பாண்டு 60 பேருக்கு வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க வங்கிகள் / தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு ரூ.50 லட்சம் இலக்கீடாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்: வயது 18 முதல் 35 வரை. சிறப்புப் பிரிவுக்கு 10 ஆண்டுகள் விலக்கு. 8-ஆம் வகுப்பு தோ்ச்சி.
மேலும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் நடப்பாண்டு 28 பேருக்கு சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க வங்கிகள் மூலம் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு ரூ.50 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு இல்லை.
கல்வித் தகுதி: படிக்காத இளைஞா்கள், சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சம்; உற்பத்தித் தொழிலுக்கு கடன் ரூ.10 லட்சம். எட்டாம் வகுப்பு தோ்ச்சி. மானியம் நகா்ப்புறங்களில் 15 மற்றும் கிராமப்புறங்களில் 25 சதவீதம் உச்சமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இணையதளத்தில் ஆதாா் அட்டை, புகைப்படம் ,கல்வித் தகுதி சான்றிதழ், மாற்றுச் சான்று, புள்ளி விவரம் திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு இணை இயக்குனா் / பொது மேலாளா், மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0416-2242413, 2242512 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.