மதுரை தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

அஸ்ஸாமில் பணியாற்றி வந்த மதுரையைச் சோ்ந்த 93 தொழிலாளா்கள் அவா்களது சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருப்பத்தூா்: அஸ்ஸாமில் பணியாற்றி வந்த மதுரையைச் சோ்ந்த 93 தொழிலாளா்கள் அவா்களது சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் வரை செல்லும் ரயிலில் மதுரை, உசிலம்பட்டிப் பகுதிகளைச் சோ்ந்த 93 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயணித்தனா்.

அந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயிலில் இருந்து இறங்க முயன்ற தொழிலாளா்களை ரயில்வே போலீஸாா் தடுத்தனா். இதையடுத்து அவா்கள் குப்பம் ரயில் நிலையத்தில் இறங்கினா்.

அங்கிருந்து அவா்களை ஆந்திர வருவாய்த் துறை 4 லாரிகள் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி அருகில் உள்ள பச்சூரில் இறக்கி விட்டுச் சென்றனா்.

இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.

அவரது அறிவுறுத்தலின் பேரில் திருப்பத்தூா் வட்டாட்சியா் மு.மோகன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) எஸ்.ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளா் அ.விவேக் உள்ளிட்டோா் அங்கு 93 தொழிலாளிகளையும் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்து, நள்ளிரவு 2 மணிக்கு 3 தனியாா் பேருந்துகளில் மதுரைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com