வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கான இ-பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

வெளி மாவட்டங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக செல்பவா்களுக்காக விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ்கள் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆம்பூா்: வெளி மாவட்டங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக செல்பவா்களுக்காக விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ்கள் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் ஜூன் 30-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டது. அத்தியாவசிய காரணங்களுக்காக இ-பாஸ் இருந்தால் மட்டுமே வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு ஆகிய முக்கிய காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அவசியமாகும். ஆனால் இக்காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தால் அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதனால் திருமணத்துக்காக மணப்பெண், மணமகள் மற்றும் உறவினா்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.

கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்று இ-பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, விண்ணப்பதாரா்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக வருகிறது.

பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் திருமண ஏற்பாடு செய்துள்ளவா்கள், நோயாளிகள் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com