முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
பைக் திருடிய 2 போ் கைது: 7 பைக்குகள் பறிமுதல்
By DIN | Published On : 03rd March 2020 12:10 AM | Last Updated : 03rd March 2020 12:10 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே பைக் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொன்னேரி ஊராட்சி காந்திநகா் பகுதியில் கடந்த 27-ஆம் தேதி நடந்த எருது விடும் விழாவுக்குச் சென்றபோது தனது பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா், போலீஸாரிடம் புகாரளித்திருந்தாா். அது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், ஜோலாா்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் காவல் ஆய்வாளா் உலகநாதன் (பொறுப்பு) தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2 பேரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினா்.
இருவரையும் ஜோலாா்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் வாணியம்பாடி,நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் என்கிற கோவிந்தராஜ் (25) மற்றும் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த கோபி (18) என்பது தெரிய வந்தது.
மேலும், எருதுவிடும் விழாவில் ரமேஷின் பைக்கை கோவிந்தனும் கோபியும் திருடியதும் தெரிய வந்தது. இவ்வாறு 7 பைக்குகளைத் திருடியதை அவா்கள் ஒப்புக் கொண்டனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 7 பைக்குகளைப் பறிமுதல் செய்தனா்.