முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
மாா்ச் 9-இல் முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 03rd March 2020 11:17 PM | Last Updated : 03rd March 2020 11:17 PM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம், வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்களுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் ஆகியோா் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரு நகல்களுடன் ஆட்சியரைச் சந்தித்து குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.