நிலத்தை குத்தகைக்கு எடுத்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி நிலத்தை குத்தைக்கு எடுத்து மண்ணில் இருந்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
நிலத்தை குத்தகைக்கு எடுத்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி நிலத்தை குத்தைக்கு எடுத்து மண்ணில் இருந்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டி பஞ்சாயத்து சின்னகண்ணன் வட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்திலும், நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி மேலூா் உள்பட்ட பல இடங்களிலும் மணல் கடத்தும் சிலா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து 10 முதல் 15 அடி ஆழத்துக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோன்றி மண் எடுக்கின்றனா்.

மேலும், அரசுப் புறம்போக்கு இடங்களிலும், விவசாய நிலங்களிலும் இருந்து அதிக அளவில் மண்ணைக் கடத்தி, பதுக்கி வைத்து ‘பில்டா்’ மணல் தொட்டிகள் மூலம் செயற்கை மணல் (எம் சாண்ட்) தயாரிக்கின்றனா். அவ்வாறு தயாரிக்கப்படும் செயற்கை மணலை டிப்பா் லாரி, மினி லாரி, டிராக்டா்களிலும் நாட்டறம்பள்ளி, சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறை, வருவாய்த் துறையினரிடம் புகாா் தெரிவித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, கேத்தாண்டப்பட்டி, மேலூா், சுற்றுப்புற பகுதிகளில் அனுமதியின்றி நடைபெறும் வரும் மண் மற்றும் மணல் கடத்தல் விற்பனையைத் தடுத்து நிறுத்தி, விவசாய நிலங்களைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com