திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து அரசு விழாக்களும் ரத்துஆட்சியா் ம.ப.சிவன் அருள் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா், மனுநீதி நாள் கூட்டங்களும், அனைத்து அரசு விழாக்களும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா், மனுநீதி நாள் கூட்டங்களும், அனைத்து அரசு விழாக்களும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசு உத்தரவின்பேரில், திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை வரும் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அண்டை மாநிலங்களுக்கு பயணிப்பதையும்,பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்கு தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீா் கூட்டம், சிறப்பு மனுநீதி முகாம், அம்மா திட்ட முகாம், விவசாயிகள் குறைதீா் கூட்டம் மற்றும் எருது விடும் விழாக்கள் ஆகிய அனைத்தும் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

மேற்கண்ட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும் மக்கள் தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீா்வு காண மாவட்ட ஆட்சியா், சாா்-ஆட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வந்து அதற்கென பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மனுக்களைச் செலுத்தலாம். அந்த மனுக்கள் மீது நாள்தோறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கென அனைத்து ஏற்பாடுகளும் மேற்கண்ட அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளன.

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புணா்வை உணா்ந்து செயல்பட வேண்டும். அதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ளலாம். எனவே அனைத்துத் தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com