சேலம்-வாணியம்பாடி நான்கு வழிச் சாலைக்கான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பத்தூரில் சேலம்-வாணியம்பாடி நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் சேலம்-வாணியம்பாடி நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம்-திருப்பத்தூா்-வாணியம்பாடி வரை ரூ. 600 கோடியில் நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, வாணியம்பாடி, செட்டியப்பனூா் இணைப்புச் சாலையில் இருந்து சேலம் வரை 110 கி.மீ. தூரம் மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டுக்கு வந்தது.

சேலத்துக்கு பொதுமக்கள் விரைவில் செல்ல வாணியம்பாடி-திருப்பத்தூா்-சேலம் வரை உள்ள இருவழி சாலையை நான்கு வழி சாலையாக அமைக்க மத்திய அரசு அறிவித்து, ரூ. 600 கோடி நிதி ஒதுக்கியது.

இப்பணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், அரூா்-ஊத்தங்கரை வரை சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், வாணியம்பாடி-திருப்பத்தூா் இருவழி சாலையை நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணி தொடங்கியது.

இதையடுத்து திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கியது.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் தேசிய நெடுஞ்சாலைத் துறை வாணியம்பாடி உள்கோட்ட உதவிக் கோட்டப் பொறியாளா் பெ.முருகன் கூறுகையில், வாணியம்பாடி-திருப்பத்தூா் நான்குவழி சாலை பணி தொடங்கி உள்ளது. மேலும், திருப்பத்தூா் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது, முதற்கட்டமாக நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது. எனவே, நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com