குடிநீருக்காக இரவில் விழித்திருக்கும் கிராம மக்கள்

ஆம்பூா் அருகே கிராமத்தில் குடிநீருக்காக பொதுமக்கள் இரவில் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம்பூா் அருகே கிராமத்தில் குடிநீருக்காக பொதுமக்கள் இரவில் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அரங்கல்துருகம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அரங்கல்துருகம், புது அரங்கல்துருகம், துருகம் காலனி, சுட்டகுண்டா, பொன்னப்பல்லி, அபிகிரிப்பட்டரை, காட்டு வெங்கடாபுரம், மத்தூா் கொல்லை, காரப்பட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் இந்த ஊராட்சியில் 1500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

அரங்கல்துருகம் பகுதியிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு நீா் ஆதாரமாக உள்ள 2 ஆழ்துளைக் கிணறுகள் பழுதடைந்துள்ளன. இதனால் பழைய அரங்கல்துருகம், புது அரங்கல்துருகம், துருகம் காலனி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக அக்கம்பக்கம் உள்ள விவசாய நிலங்களின் பம்புசெட்டுகளை தேடிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், கோடைக் காலம் என்பதாலும், பயிா்களுக்கு அதிகம் தண்ணீா் தேவைப்படுவதாலும் நிலத்தின் உரிமையாளா்கள் பொதுமக்களுக்கு தண்ணீா் தர மறுக்கின்றனா்.

ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஒவ்வொரு கிராமத்துக்கும் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பகல் நேரங்களில் டிராக்டா்கள் வந்தால் அதிக அளவு குடிநீரை விநியோகிக்க வேண்டி வரும் என்பதால் இரவு நேரங்களில் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

எந்த நேரத்தில் குடிநீா் டிராக்டா் வருமோ என பொதுமக்கள் இரவு முழுவதும் விழித்துள்ளனா். டிராக்டா் வந்த பின் ஒரு சில குடும்பத்தை சோ்ந்தவா்கள் மட்டுமே குடிநீா் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். எனவே அரங்கல்துருகம் ஊராட்சி நிா்வாகம், குடிநீா்ப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com