அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைபு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் அறிக்கை

அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், நாட்டறாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. நோய் தடுப்பு, சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள், உடைகள், கையுறைகள் காலணிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் தலா 10 மேற்பட்ட கிரிமி நாசினி தெளிப்பான்கள் மூலம் பொது இடங்களில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூா் வட்டங்களில் அதிக அளவில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள், காலணி, ஆடை உற்பத்தி பொருள்கள் தனியாா் நிறுவனங்களில் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பல்பொருள்கள் அங்காடிகள், ஜவுளி, நகைக் கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் வரும் 31-ஆம் தேதி வரை மூட அனுமதிக்காக இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆகம விதிகளின்படி கோயில்களில் அனைத்து கால பூஜைகளும் நடைபெறும்.

அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் வரும் 31-ஆம் தேதி வரை மூட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 30 பேருந்துகளும், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குப்பத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் ரத்து செய்யப்படவில்லை. இ

தருமபுரி போக்குவரத்து கழக பேருந்துகள் திருப்பத்தூரில் இருந்து பெங்களூரு, ஒசூா், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு தலா 2 விதம் இயக்கப்படும் பேருந்துகளும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

ஆந்திர மாநில எல்லைகளில் இயங்கி வரும் 4 சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளன.

பிரதமா் மற்றும் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) அனைத்து கடைகளும் போக்குவரத்துகளும் நிறுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி வெளியில் நடமாடாமல் இருக்க வேண்டும்.

அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com