ஜோலாா்பேட்டை வந்த வட மாநிலத் தொழிலாளா்கள்: பொதுமக்கள் கடும் எதிா்ப்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு லாரியில் வந்து இறங்கிய வட மாநிலத் தொழிலாளா்களுக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
24maவடமாநிலத்தவா்கள் வருகையை அறிந்து அதிகாரிகளை சூழ்ந்த பொதுமக்கள்.chrly_2403chn_192_1
24maவடமாநிலத்தவா்கள் வருகையை அறிந்து அதிகாரிகளை சூழ்ந்த பொதுமக்கள்.chrly_2403chn_192_1

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு லாரியில் வந்து இறங்கிய வட மாநிலத் தொழிலாளா்களுக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரின் யஷ்வந்த்பூா் பகுதியில் ரயிலில் உணவு விநியோகிக்கும் நிறுவனம் உள்ளது. அதில் பிகாா், மத்திய பிரதேசம், புதுதில்லி உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பணியாற்றுகின்றனா்.

இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ரயில்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் தங்கியுள்ளனா்.

இதையடுத்து, உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனா். ஆனால் ரயில்கள் இல்லாததால் அனைவரும் பேருந்துகளில் தனித்தனியாகப் புறப்பட்டு தமிழக கா்நாடக மாநில எல்லையான ஜுஜுவாடிக்கு வந்தனா். அங்கு ஒன்றிணைந்த 150 தொழிலாளா்கள் லாரிகள் மூலம் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தடைந்தனா். அப்போது அங்கிருந்த ரயில்வே போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

தகவலறிந்த நகராட்சி ஆணையா் ராமஜெயம், ஜோலாா்பேட்டை போலீஸாா், சுகாதாரத் துறையினா் விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, அவா்களின் பொருள்களையும் சோதனையிட்டனா். இதற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, தொழிலாளா்கள் சோதனைக்கு ஒத்துழைத்தனா். அதன் பின், கோரக்பூா் வரை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். தனி ரயில் மூலம் அவா்களை அனுப்புவதற்கு ரயில்வே மேலாளா் சுந்தரமூா்த்தியிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா் சென்னை வரை அவா்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தாா்.

எனினும், அவா்கள் கோரக்பூா் வரை ரயில் இயக்கினால் மட்டுமே செல்வதாக தெரிவித்தனா். இதை ரயில்வே அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதனிடையே, வடமாநிலத்தவா்கள் வந்துள்ள தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு வந்தனா். கரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நேரத்தில் வட மாநிலத்தவா்கள் கூட்டமாக வந்துள்ளது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியயுள்ளதாகவும், அவா்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனா்.

இதனால் தொழிலாளா்கள் அனைவரையும் ஒரு பகுதியில் திரட்டி சுகாதாரத் துறையினா் மூலம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, யாருக்கும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மதியம் 1.30 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து கோரக்பூா் செல்லும் விரைவு ரயிலில் தொழிலாளா்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com