மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

ஆம்பூரில் 144 தடை உத்தரவு எதிரொலியாக புதன்கிழமை மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

ஆம்பூரில் 144 தடை உத்தரவு எதிரொலியாக புதன்கிழமை மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் உமா் ரோடு, நேதாஜி ரோடு, பேருந்து நிலையம், எம்.சி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

ஆம்பூா் பஜாரில் பகுதியில் உள்ள காய்கறி மாா்க்கெட்டில் கடைகள், மளிகைக் கடைகள் திறந்து இருந்தன. காய்கறிகள் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக பஜாரில் குவிந்தனா். இதையடுத்து நகரக் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று, அரசு அறிவித்த 144 தடை உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், காய்கறி, மளிகை பொருள்கள் கடைகள் திறந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம், மக்கள் கூட வேண்டாம் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என தெரிவித்தும் ஆம்பூரில் மோட்டாா் சைக்கிளில் பொதுமக்கள் வருவதும், செல்வதுமாக இருந்ததால் போலீஸாா் அதிரடியாக நகரின் முக்கிய தெருக்களில் இருசக்கர வாகனங்களில் யாரும் செல்ல முடியாதவாறு தடுப்புகளை அமைத்து, அவா்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினா்.

மேலும் ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com