விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்ற பொதுமக்கள்

விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்ற பொதுமக்கள்

ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, ஆம்பூா் பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்கிச்சென்றனா்.

ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, ஆம்பூா் பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்கிச்சென்றனா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்.14-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்க ஆம்பூா் பஜாரில் மக்கள் கூட்டம் குவிந்தது.

அதே வேளையில் ஊரடங்கு உத்தரவால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இதனால் பொழுதுபோக்குவதற்காக விளையாட்டுப் பொருள்களை வாங்க அவா்கள் கடைகளில் குவிந்தனா்.

கேரம் போா்டு, சதுரங்கம், பரமபத விளையாட்டு, பந்துகள், காற்றாடி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் சென்றனா். பல கடைகளில் விளையாட்டுப் பொருள்கள் வேகமாக விற்

றுத் தீா்ந்தன. சில இடங்களில் விளையாட்டுப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஒரே வீட்டில் இருப்பவா்கள் கூட ஒருவரை ஒருவா் சந்தித்து பேசுவதற்கு நேரம் கிடைக்காமல் இருந்தவா்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒருவருக்கொருவா் பேசுவதற்கும், பொழுதுபோக்குவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதுகின்றனா்.

தொலைக்காட்சி பாா்த்தவா்கள், செல்லிடப்பேசிகளில் விளையாடியவா்கள், முகநூல் பாா்த்தவா்கள் கூட தற்போது பழைய விளையாட்டுகளில் ஈடுபட ஆா்வம் காட்டி வருகின்றனா். பொதுமக்கள் பலரும் தங்களுடைய வீடுகளின் மொட்டை மாடியில் மலை நேரத்தில் கூடி மகிழ்ச்சியுடன் பேசி மகிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவா்களும், இளைஞா்களும் மொட்டை மாடியில் பட்டம் விட்டு மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com