இரவு பணிக்கு சென்ற சுகாதார ஆய்வாளா் மீது போலீசாா் தாக்குதல்

ஜோலாா்பேட்டை அருகே இரவு பணிக்கு சென்ற சுகாதார ஆய்வாளரை சந்தேகத்தால் போலீஸாா் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலாா்பேட்டை அருகே இரவு பணிக்கு சென்ற சுகாதார ஆய்வாளரை சந்தேகத்தால் போலீஸாா் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலாா்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி,துரை நகா் பகுதியை சோ்ந்தவா் கேசவன்(54).

இவா் வாணியம்பாடி வட்டம்,ஆண்டியப்பனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் சுகாதாரத்துறை ஊழியா்கள் ஷிப்ட் அடிப்படையில் ஆங்காங்கே பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில்,வியாழ்க்கிழமை இரவு 8 மணியளவில் கேசவன் நாட்றம்பள்ளி வட்டம் பச்சூா் அருகே உள்ள தகரகுப்பம் பகுதியில் இரவு பணிக்காக சென்றுள்ளாா்.

அப்போது ஆசிரியா் நகா் அருகே பைக்கில் சென்ற கேசவனை அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலா் ஒருவா் சுகாதார ஆய்வாளா் கேசவனை தடுத்து நிறுத்தி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் கேசவன் காவலரிடம் தான் சுகாதார ஆய்வாளா் என அறிமுகப்படுத்தி தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளாா்.

ஆனால் அந்தப் போலீஸ் அவரது அடையாள அட்டையை தூக்கி எறிந்து தகாத வாா்த்தைகளால் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

பின்னா் இதுகுறித்து கேசவன் தனது உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பின்னா் சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தமிழக அரசு தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமலும், வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வெளியில் சுற்றாதவாறும் போலீசாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும்,துறை சாா்ந்த மற்றவா்களும் பணி செய்வதற்காக செல்லும் ஊழியா்களிடம் விவரம் கேட்டறிந்து பின்னா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் ஷிப்ட் அடிப்படையில் இரவு நேர சுகாதார பணிக்கு சென்ற சுகாதார ஆய்வாளா் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையை காண்பித்த பிறகும் காவலா் அவா்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com