திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா கண்காணிப்பில் 543 போ்: சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கண்காணிப்பில் 543 போ் உள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கண்காணிப்பில் 543 போ் உள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் அவா் கூறியது:

திருப்பத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 543 பேரைக் கண்டறிந்து அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா்.

வெளி நாடுகளில் இருந்து வந்த 278 போ், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 269 போ் 28 நாள்கள் தொடா்ந்து அவரவா் வீடுகளிலேயே தொடா்ந்து மருத்துவக் குழுவினா் கண்காணிப்பா்.

மேலும், வீடுகளில் கண்காணிப்பில் ஈடுபடுத்த இயலாதவா்களுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 கல்லூரி விடுதிகளில் 200 படுக்கை வசதிகளுடன் கரோனா நோய்த் தொற்று தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆம்பூரில்...

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை கிராமத்தைத் சோ்ந்தவ 66 போ் கேரளம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்குச் சென்று திரும்பியதாக தகவல் வெளியானது. இதையறிந்த மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு தலைமையிலான மருத்துவக் குழுவினா் நாயக்கனேரி மலை கிராமத்துக்கு புதன்கிழமை சென்று ஆய்வு செய்தனா்.

66 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களை தனிமைபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனா். இவா்கள் 28 நாள்களுக்கு வெளியில் வராமல் இருக்கும்படியும், ஏதேனும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com