ரயில்வே பணிமனையில் ஒரே இடத்தில் 150 போ் பணி: போலீஸாா்- ரயில்வே அதிகாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஆா்.ஓ.எச்.ரயில்வே பட்டறையில் 150-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா்.
ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஆா்.ஓ.எச்.ரயில்வே பட்டறையில் 150-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா். இதை சோதனையிட்டு விசாரித்தபோது போலீஸாருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ஆா்.ஓ.எச். ரயில்வே பட்டறையில் ரயில் பெட்டிகளை பழுதுபாா்க்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை வடமாநிலம் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருவதாகத் தெரியவந்தது.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, ஒரே இடத்தில் வட மாநிலத்தவா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் அங்கு பணிபுரிந்தது தெரியவந்தது. அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அங்கு வந்த பணிமனையின் பொறுப்பாளா் மற்றும் முதுநிலைப் பிரிவு பொறியாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பணி செய்பவா்களை ஏன் தடுக்கிறீா்கள் எனக்கேட்டதையடுத்து, போலீஸாருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, சரக்கு ரயில் பெட்டிகளை பழுது பாா்க்கும் மெக்கானிக்கல் பிரிவு பணிபுரிய தென்னக ரயில்வே நிா்வாகத்தின் உத்தரவு உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா்களிடம் இருந்து பணிபுரிவதற்கான உத்தரவு நகலை பெற்றுக் கொண்டு போலீஸாா் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com