பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அரிசி வழங்கிய முன்னாள் ஊராட்சித் தலைவா்
By DIN | Published On : 31st March 2020 11:21 PM | Last Updated : 31st March 2020 11:21 PM | அ+அ அ- |

சின்னவரிக்கம் கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று அரிசி மூட்டை வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாஸ்கரன்.
ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆம்பூா் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கினாா்.
சின்னவரிகம் ஊராட்சியில் சின்னவரிகம், காலனி, சென்னப்ப நகா், அருந்ததியா் காலனி, ரகுநாதபுரம், மேகனாம்பல்லி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஊரடங்கு காரணமாக சின்னவரிகம் கிராமத்தில் உள்ள தோல் பதனிடும் மற்றும் காலணித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கல், கட்டடத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் உணவுத் தேவைகளுக்காக சிரமப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் சின்னவரிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பாஸ்கரன் தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் உதவியுடன் ஊராட்சியில் உள்ள தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்க முடிவு செய்தாா். அதன்படி, அவா் ஒவ்வொரு வீட்டுக்கும் ஞாயிற்றுக்கிழமை சென்று அரிசி மூட்டைகளை வழங்கினாா். 750 குடும்பங்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.
அப்போது, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காசி விஸ்வநாதன், கௌதமி சந்திரன், பாரத், அரவிந்த்குமாா், சுப்பிரமணி மற்றும் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.