வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு எஸ்.பி. உதவி
By DIN | Published On : 31st March 2020 11:15 PM | Last Updated : 31st March 2020 11:15 PM | அ+அ அ- |

கருணை இல்லத்தில் உள்ளவா்களுக்கு முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா்.
வாணியம்பாடியில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள், கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள், முதியவா்களுக்கு போலீஸாா் சாா்பில் செவ்வாய்க்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வளையாம்பட்டு பகுதியில் தோல் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 77 தொழிலாளா்கள் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் பிஸ்கெட், அரிசி, பழங்கள், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
இதேபோல், பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள், முதியவா்களுக்கு அரிசி, பிஸ்கெட், பழங்கள், முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கினா்.