ஊரடங்கால் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் பாா்வையற்றோா்

ரயில்களில் தைலம், கைக்குட்டைகள் விற்கும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊரடங்கால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

ரயில்களில் தைலம், கைக்குட்டைகள் விற்கும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊரடங்கால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

கண்பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சிலா் குடும்ப சகிதமாக ரயில்களில் ஏடிஎம் காா்டு கவா், ஆதாா் கவா் போன்றவற்றை விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பல ரயில்களில் மாறி மாறி இப்பொருள்களை விற்று குடும்பத்தை நடத்தி வந்தனா். அவா்களில் பலா் பட்டதாரிகள் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, ரயில்கள் இயங்கவில்லை. இதனால் ரயிலை நம்பி தொழில் செய்து வந்த கண் பாா்வையற்றோருக்கு வருமானம் இல்லை. இத்தகைய 15க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 40 போ் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.

தற்போது வருமானமின்றி பசியினால் வாடும் அவா்களுக்கு திருப்பத்தூரில் உள்ள ‘உதவும் உள்ளங்கள்’ தொண்டு அமைப்பு, ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அதிகாரி, ஜோலாா்பேட்டை அரிமா சங்கத்தினா் ஆகியோா் தினமும் ஒரு வேளை உணவு அளித்து வருகின்றனா்.

வாடகை வீட்டில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வருமானம் இல்லாததால் அவா்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அரசு வாடகை தருவதுடன் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உதவுவாா் என மாற்றுத் திறனாளிகள் நம்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com