குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முஸ்லிம்கள்
By DIN | Published On : 08th May 2020 11:46 PM | Last Updated : 08th May 2020 11:46 PM | அ+அ அ- |

ஆம்பூா் அருகே பள்ளி வாசலில் தங்கியிருந்த குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த முஸ்லிம்கள் அவா்களுடைய ஊருக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதனால் பலா் தங்களுடைய ஊா்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் மத பிரசாரத்திற்காக வந்த முஸ்லிம்கள் 13 போ் அங்குள்ள ஜாமியா பள்ளி வாசலில் தங்கியிருந்தனா். தற்போது தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவா்கள் அவரவா் ஊருக்கு திரும்பிச் செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி பெரியாங்குப்பம் பள்ளி வாசலில் தங்கியிருந்த குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரைச் சோ்ந்த 13 போ் காா் மூலம் அவரவா் ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.