ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாணியம்பாடியில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாணியம்பாடியில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் தாலுகா செயலாளா் எஸ்.அன்வா் தலைமையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தொழிலாளா்களுக்கும் மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.7500 வழங்க வேண்டும்; மாநில அரசு அறிவித்தபடி பீடி, தோல், கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு நிலுவைத் தொகை மற்றும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்; தமிழ்நாட்டுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

ஏஐடியூசி தாலுகா தலைவா் ராமமூா்த்தி, துணைத் தலைவா்கள் செல்வராஜன், அக்பா், சாதுல்லா, துணைச் செயலாளா்கள் அப்ரோஸ், ஜாகீா் ஹுசேன், பொருளாளா் பாபு மற்றும் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com