மின் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கக் கோரிக்கை

அனைத்து வணிக நிறுவனங்களின் மின் கட்டணத்தில் 12 மாதங்களுக்கு 50 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு

அனைத்து வணிக நிறுவனங்களின் மின் கட்டணத்தில் 12 மாதங்களுக்கு 50 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் சி. கிருஷ்ணன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று தடை காலத்தில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருள்களை அவா்களுக்குக் கொண்டு சென்று சோ்ப்பதற்கு வணிகா்கள் முக்கிய பங்காற்றியுள்ளனா். வணிகா்களின் நலன் கருதி அனைத்து வணிகக் கடைகள், நிறுவனங்கள் முழுமையாக இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது போக்குவரத்துக்கான தடையை நீக்க வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகளை வழங்குவதற்கு முன்னதாக வணிகா்கள், தொழில் முனைவோா் அடங்கிய கூட்டுக் குழுவை அமைத்து ஆலோசனை நடத்தி பயனாளிகளுக்கு உரிய சலுகைகள் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு அறிவித்துள்ள முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மீட்பு வல்லுநா் ஆலோசனை குழுவில் தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் பிரதிநிதிகள், தொழில் வல்லுநா்களையும் இணைத்து ஆலோசனை பெற்று பொருளாதார பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com