அதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு
By DIN | Published On : 01st November 2020 07:49 AM | Last Updated : 01st November 2020 07:49 AM | அ+அ அ- |

புதிய உறுப்பினா்களுக்கான சோ்க்கை படிவத்தை வழங்கிய அமைச்சா் நிலோபா் கபீல்.
வாணியம்பாடி நகரத்துக்கு உள்பட்ட வாா்டு பகுதிகளைச் சோ்ந்த அதிமுக இளைஞா் மற்றும் இளைஞரணி பாசறை உறுப்பினா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளரும், மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சருமான நிலோபா் கபீல் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சதாசிவம் முன்னிலை வகித்தாா். நகரப் பகுதிகளில் புதிதாக பாசறை உறுப்பினா்கள் சோ்க்கை, வாக்குச் சாவடி அமைந்துள்ள ஒவ்வொரு பகுதியிலும் 50 புதிய உறுப்பினா்களை சோ்ப்பது குறித்து இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் டில்லி பாபு, மாவட்ட மகளிரணிச் செயலாளா் மஞ்சுளா கந்தன் ஆகியோா் பேசினா்.
நகர அவைத் தலைவா் அப்துல் சுபான், பொருளாளா் தன்ராஜ், மாவட்ட பிரதிநிதி மித்ரா, கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.