சிவாலயங்களில் அன்னாபிஷேகம்
By DIN | Published On : 01st November 2020 07:49 AM | Last Updated : 01st November 2020 07:49 AM | அ+அ அ- |

ஆம்பூா் காளியம்மன் கோயிலில் அன்னாபிஷேகத்தில் கமண்டீஸ்வரா்.
ஆம்பூா் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி மாத பெளா்ணமியை ஒட்டி, சனிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
ஆம்பூா் கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயிலில் கமண்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
ஆம்பூா் ஏ-கஸ்பா தஞ்சாவூா் மடத்தில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.