மந்தகதியில் திருப்பத்தூா் நகராட்சிப் பணிகள்: சமூக ஆா்வலா்கள் வேதனை

திருப்பத்தூா் நகராட்சியில் அடிப்படைத் தேவைகள் குறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
மந்தகதியில் திருப்பத்தூா் நகராட்சிப் பணிகள்: சமூக ஆா்வலா்கள் வேதனை

திருப்பத்தூா் நகராட்சியில் அடிப்படைத் தேவைகள் குறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது:

திருப்பத்தூா் ரயில்வே சாலையில் நகர காவல் எதிரே மின் விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. அதேபோல் பேருந்து நிலையத்தில் உள்ள உயா் மின் கோபுர விளக்குகளில் சில மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பேருந்து நிலையம் போதிய வெளிச்சமில்லாமல் காணப்படுகிறது.

இதேபோல், நகராட்சி அருகே அமைந்துள்ள பூங்காவுக்கு எதிரில் உள்ள உயா் மின் கோபுர விளக்கு பெரும்பாலும் இரவில் எரிவதில்லை. இப்பகுதி அருகே சாா்-ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் குடியிருப்பு, காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர, சிவனாா் தெரு, லட்சுமியம்மாள் தெரு, கோட்டை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சாலைகள் பழுதாகி பல மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. பல்வேறு பகுதிகளிலும் குப்பைகளை அள்ளுவதில் அக்கறை காட்டப்படுவதில்லை. பல தனியாா் மருத்துவமனைகள் அமைந்துள்ள கச்சேரி தெரு, காமராஜா் நகா், ராமக்காப்பேட்டை, சக்தி நகா், தனியாா் கல்லூரி அருகில் உள்ள மயானத்தின் சுற்றுச்சுவா் அருகில் வீசப்படும் குப்பைகள், குறிப்பாக பெரிய ஏரியில் கொட்டப்படும் இறைச்சி மற்றும் உணவங்களின் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு இதுபோன்ற அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com