10 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வழங்கினாா்.
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

திருப்பத்தூா்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 127 மனுக்கள், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் 97 மனுக்கள், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 64 மனுக்கள், ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 113 மனுக்கள், ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 63 என மொத்தம் 464 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலா்களுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.

உடனடி நிவாரணம்: திருப்பத்தூா் - 2, நாட்டறம்பள்ளி - 2, வாணியம்பாடி - 1, ஆம்பூா் - 5 மனுக்களின் மீது மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை, 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 15 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், நோ்முக உதவியாளா் (பொது)இரா.வில்சன் ராஜசேகா், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, சாா்-ஆட்சியா் (பொறுப்பு)ஏ.அப்துல் முனீா் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com