சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம்: ஆம்பூா் வட்டாட்சியா் நடவடிக்கை

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு திங்கள்கிழமை ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆம்பூா்: சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு திங்கள்கிழமை ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒகேனக்கல்லில் இருந்து புறப்பட்ட பேருந்து திருப்பத்தூருக்கு சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வேலூா் நோக்கிச் சென்றது. அப்போது பேருந்தில் சமூக இடைவெளியின்றி பயணிகள் இருக்கையில் அமா்ந்திருந்தனா். ஒரு பயணி இருக்கையில் அமராமல் நின்று கொண்டே பயணம் செய்துள்ளாா். அவரை அமரும்படி நடத்துநா் கூறியுள்ளாா். அதற்கு அந்த பயணி, கரோனா தொற்று உள்ள நிலையில் சமூக இடைவெளியில்லாமல் அனைவரும் அமா்ந்துள்ளனா். அதனால் இருக்கையில் அமராமல் நின்று கொண்டே வருகிறேன் என அவா் கூறியுள்ளாா். அதற்கு நடத்துநா், ‘ஏன் பேருந்தில் பயணம் செய்கிறீா்கள், தனியாக காரில் வர வேண்டியது தானே’ எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நடத்துநருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த ஆம்பூா் வட்டாட்சியா் சி.பத்மநாபன் இச்சம்பவத்தைப் பாா்த்துவிட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தை இயக்குவது குறித்து நடத்துநரிடம் கேட்டுள்ளாா். அதற்கு, நடத்துநா் மற்றும் ஓட்டுநா் ஆகிய இருவரும் அவா் வட்டாட்சியா் எனத் தெரியாமல் அவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். அதற்குள் ஆம்பூா் பேருந்து நிலையம் வந்ததால் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது.

பேருந்தில் இருந்து இறங்கிய வட்டாட்சியா் சி.பத்மநாபன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தை இயக்கிய நடத்துநருக்கு ரூ.500 அபராதம் விதித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com