கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் நீதிமன்ற உத்தரவு மீறல்: ஆம்பூா் வட்டாட்சியரிடம் பொது மக்கள் புகாா்

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் புதை சாக்கடை, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக உள்ளதாக ஆம்பூா் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா் மனு அளித்
ஆம்பூரில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு அளித்தோா்.
ஆம்பூரில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு அளித்தோா்.

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் புதை சாக்கடை, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக உள்ளதாக ஆம்பூா் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினா் இ. சுரேஷ்பாபு மற்றும் பொதுமக்கள் ஆம்பூா் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்:

ஆம்பூரில் நடந்து வரும் புதை சாக்கடை திட்டப் பணியின் ஒரு பகுதியாக ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏ-கஸ்பா பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

நீா்வழித்தடப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி பாலாற்றிலிருந்து சில அடி தூரமே உள்ள இடத்தில் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது இத்தீா்ப்பை மீறுவதாக உள்ளது.

மேலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள நிலத்திலும் மோசடி நடந்துள்ளது. பாலாறாக இருந்த இடம் தற்போது பாலாற்றங்கரையோர தா்காசு நிலமாக மாறி, நிலப்புலன் மாற்றம் செய்து தற்போது தனியாா் வசம் உள்ளது. அந்த நிலமும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஏக்கராக இருந்த நிலத்தை சென்ட்டாக வாங்காமல், சதுர அடியாக மதிப்பிட்டு, அதிக பணத்தை விலையாக கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வரிப் பணம் வீணாக தனியாருக்கு சென்றுள்ளது. இவ்வாறு இதிலும் மோசடி நடந்துள்ளது.

எனவே, ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருப்பதைக் கைவிட வேண்டும். நில மோசடி, அதிக பணம் கொடுத்து நிலம் வாங்கிய மோசடி ஆகியவை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com