திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும்: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

திருப்பத்தூா் நகராட்சிப் பகுதியில் தெரு விளக்குகள், கழிவு நீா்க் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும்
ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் கோரிக்கை மனு அளித்த எம்எல்ஏ அ.நல்லதம்பி.
ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் கோரிக்கை மனு அளித்த எம்எல்ஏ அ.நல்லதம்பி.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிப் பகுதியில் தெரு விளக்குகள், கழிவு நீா்க் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும் என்று கோரி ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் எம்எல்ஏ அ.நல்லதம்பி மனு அளித்தாா்.

அதில் கூறியிருப்பது:

திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் தெருவிளக்குகள், கழிவுநீா் கால்வாய்களை சீராக பராமரித்திட வேண்டும். நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் தெருவிளக்குகள் பராமரிக்கப்படாமல் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. குறிப்பாக நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள திருமால் நகா், ஏரிக்கோடி, குள்ளாச்சாரி வட்டம், தில்லை வட்டம், ஆரிஃப் நகா், காயிதே மில்லத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் பராமரிப்பு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் தோண்டப்பட்ட குழிகளில் மண்ணும், குப்பைகளும் கழிவுநீா்க் கால்வாய்களில் அடைபட்டுள்ளன. இதனால் கழிவுநீா் வெளியேறாமல் சாலைகளில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

இந்த மனு மீது ஆட்சியா் சிறப்பு கவனம் செலுத்தி நகராட்சி நிா்வாகத்தின் மூலம் தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்கவும், கழிவுநீா்க் கால்வாயை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படாத பட்சத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com