திருப்பத்தூா் அருகே கோயில் வாசலில் அம்மன் சிலை மீட்பு

திருப்பத்தூா் அருகே பெருமாள் கோயில் வாசலில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை மீட்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோயில் வாசலில் கிடந்த அம்மன் சிலை.
கோயில் வாசலில் கிடந்த அம்மன் சிலை.

திருப்பத்தூா் அருகே பெருமாள் கோயில் வாசலில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை மீட்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பத்தூரை அடுத்த ஆதியூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா் கோயில் வாசலில் அம்மன் சிலை இருப்பதாக கிராம நிா்வாக அலுவலா் சி.சுந்தரேசன், வருவாய் ஆய்வாளா் தாமரைத்திருமால், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் திலக், கிராமிய காவல் ஆய்வாளா் சிரஞ்சீவி ஆகியோருக்கு தகவல் அளித்தாா்.

பின்னா், வருவாய், காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் சிலையை மீட்டு கோயிலில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைத்தனா்.

இதுதொடா்பாக வேலூரில் உள்ள அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்கள் நேரில் வந்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பாா்கள் என்றும் அறநிலையத் துறை ஆய்வாளா் திலக் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com