நியாயவிலைக் கடை இடமாற்றத்தைக் கண்டித்து சாலை மறியல்

வாணியம்பாடியில் நியாயவிலைக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நியாயவிலைக் கடை இடமாற்றத்தைக் கண்டித்து சாலை மறியல்


வாணியம்பாடி: வாணியம்பாடியில் நியாயவிலைக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியில் கற்பகம் நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இங்கு 29, 30 ஆகிய 2 வாா்டுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன் பொருள்கள் வாங்கி வருகின்றனா். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பொருள்கள் வாங்க சிரமம் உள்ளதாகக் கூறி அக்கடையை பிரித்து கொடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இக்கோரிக்கையை ஏற்று 29-ஆவது வாா்டு நேதாஜி நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடையை மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிலையில், 30-ஆவது வாா்டு பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடை 29-ஆவது வாா்டு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை கடையை முற்றுகையிட்டனா். அதிகாரிகள் யாரும் பேச்சு வாா்த்தைக்கு வராததால், வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வட்டாட்சியா் சிவப்பிரகாசம், போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com