காா் மோதி கணவன், மனைவி பலி
By DIN | Published On : 01st October 2020 12:00 AM | Last Updated : 30th September 2020 11:09 PM | அ+அ அ- |

ராஜா-ரஞ்சிதா
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்காலபுரம் பூசாரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா(63). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். அவரது மனைவி ரஞ்சிதா(53).
அவா்கள் இருவரும் புதன்கிழமை காலை பூசாரியூா் கிராமத்தில் இருந்து வாணியம்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த கல்லாறு பகுதியில் சாலையை கடந்தபோது சென்னையில் இருந்து தா்மபுரி நோக்கி வேகமாக வந்த காா், அவா்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ராஜா நிகழ்விடத்திலேயே இறந்தாா். படுகாயமடைந்த ரஞ்சிதாவை அங்கிருந்தவா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் செல்லும் வழியிலேயே இறந்தாா்.
இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சென்னை அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் லாரன்ஸ்(53) மீது வழக்குப்பதிவு செய்தனா்.