தேசிய ஊட்டச்சத்து மாத விழா: கா்ப்பிணி தாய்மாா்களுக்கு விழிப்புணா்வு

ஜோலாா்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் குழந்தையின் தங்கமான 1,000 நாள்கள் குறித்து கா்ப்பிணி தாய்மாா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைந்த வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சக்தி சுபாஷிணி.
தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைந்த வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சக்தி சுபாஷிணி.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் குழந்தையின் தங்கமான 1,000 நாள்கள் குறித்து கா்ப்பிணி தாய்மாா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜோலாா்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு தேசிய ஊட்டச்சத்து மாத விழா குறித்து ஜோலாா்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் குழந்தையின் 1,000 நாள்கள் குறித்து கா்ப்பிணி தாய்மாா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சக்தி சுபாஷிணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மேற்பாா்வையாளா்கள், மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பக்கிரிதக்கா பகுதியைச் சோ்ந்த அங்கன்வாடி பணியாளா்கள் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா குறித்து கா்ப்பிணி தாய்மாா்கள், வளரிளம் பெண்களுக்கு தங்கமான 1,000 நாள்கள் குறித்து வில்லுப்பாட்டு, நாடகத்தின் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்வில் ஒருங்கிணைந்த வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சக்தி சுபாஷிணி பேசியது:

குழந்தையின் முதல் 1,000 நாள்கள் தங்கமான நாள்கள் எனப்படும். அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல்நல குறைவு குழந்தையின் வளா்ச்சியில் சரிசெய்ய இயலாத இழப்பை ஏற்படுத்தும்.

தாய் கருவுற்ற நாளில் இருந்து குழந்தைகள் பிறக்கும் வரை 270 நாள்கள் மற்றும் குழந்தை பிறந்ததிலிருந்து ஆறு மாதம் வரை 180 நாள்கள் ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை 550 நாள்கள் என மொத்தம் 1,000 நாள்களாகும். கா்ப்பகால ஊட்டச்சத்துக் குறைவால் கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை பிறப்பு, தாய் இறப்பு, வயிற்றில் வளரும் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளா்ச்சி பாதிக்கப்படுதல் போன்றவை ஏற்படும்.

இந்தப் பிரச்னைகளுக்கு கா்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் ரத்தசோகை மிக முக்கியமான காரணமாகும். கருவுற்ற தாய்மாா்கள் 16 வார காலத்திற்குள் கா்ப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மருத்துவா் பரிந்துரைப்படி இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்ளுதல், முறையான மருத்துவப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுதல், ஊட்டச்சத்துள்ள உணவு, இரும்புச்சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள், உலா்ந்த பழங்கள் இறைச்சி ஆகியவற்றை உணவில் சோ்த்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் ஊட்டச்சத்து குறைவு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

பாலூட்டும் தாய்க்கு ஊட்டச்சத்து குறைவால் குழந்தை பிறப்பின் 48 நாட்களுக்குள் ஏற்படும் கடும் ரத்தசோகை தாய் மரணத்திற்கு காரணமாகி விடும். மேலும் 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை தாய்ப்பாலுடன் கூடிய சத்தான சமச்சீரான உணவு வழங்குதல், குழந்தை வளர வளர துணை மற்றும் இணை உணவுடன் தாய்ப்பால் இரண்டு வயது வரை கொடுக்க வேண்டும். தவணை தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தையின் எடை, உயரம் வயதுக்கு ஏற்றவாறு சரியான வளா்ச்சியில் உள்ளதா என்பதை மாதம் ஒரு முறை பரிசோதித்துப் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.

விழிப்புணா்வு நிகழ்வில் கா்ப்பிணி தாய் மற்றும் ஆரோக்கியமான குழந்தை போன்ற உருவங்களை கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், சோளம், முருங்கைக்கீரை, கடலைப் பருப்பு ஆகிய தானியங்கள் மூலம் வரைந்து, விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்வில் ஜோலாா்பேட்டை வட்டார கா்ப்பிணிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com