முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
ஆம்பூரில் பெருமாள் சன்னதி மூலவருக்கு சிறப்பு அலங்காரம்
By DIN | Published On : 04th October 2020 07:47 AM | Last Updated : 04th October 2020 07:47 AM | அ+அ அ- |

துத்திப்பட்டு ஸ்ரீபிந்துமாதவா் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் மூலவா்.
ஆம்பூா் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ரெட்டித்தோப்பு பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில், சான்றோா்குப்பம் சுந்தரவிநாயகா் கோயிலில் உள்ள பெருமாள் சன்னதி ஆகியவற்றில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் மூலவருக்கு தங்கக் கவச அலங்காரமும், உற்சவருக்கு வெள்ளிக் கவச அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஆம்பூரைஅருகே துத்திப்பட்டு ஸ்ரீபிந்துமாதவா் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விண்ணமங்கலம் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அமா்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வடச்சேரி கிராமத்தில் அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் உற்சவா் பிரகார உலா நடைபெற்றது. குமாரமங்கலம் கிராமத்தில் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.